பாடல் 1095
வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தனதனன தனதனன தனதனனதனதனன தனதனனதனதான
பாடல் வரிகள்
வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமெனவயிரமர கதமகரமளவாக
வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழிவளையிளைஞ ருயிர்கவரவருமாய
இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகிஎழுபிறவி நெறியொழியவழிகாணா
இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுனதிருநயன கருணைசிறிதருள்வாயே
பதயுகள மலர்தொழுது பழுதில்பொரிஅவல்துவரைபயறுபெரு வயிறுநிறையவிடாமுப்
பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசைபரியதனி யெயிறுகொடுகுருநாடார்
கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடியகடலுலகு நொடியில்வருமதிவேகக்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரககடகமுட னமர்பொருதபெருமாளே.
