பாடல் 1090
உ றவின்முறை யோர்க்கு முறுதுயரம் வாய்த்து
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தாத்த தனதனன தாத்ததனதனன தாத்ததனதான
பாடல் வரிகள்
உ றவின்முறை யோர்க்கு முறுதுயரம் வாய்த்துஉ ளமுருகு தீர்த்திவுடலுடே
உ டலை முடிவாக்கு நெடியதொரு காட்டில்உ யர்கனலை மூட்டிவிடஆவி
மறலிமற மார்த்த கயிறுதனை வீக்கிவலிவினொடு தாக்கிவளையாமுன்
மனமுமுனி வேட்கை மிகவு முன தாட்கள்மகிழ்வியல்கொ டேத்தமதிதாராய்
பிறைநுதலி சேற்க ணமையரிவை வேட்புவரையில்மற வோக்குமகவாகப்
பிறிதுருவில் வாய்த்து நிறைதினைகள் காத்தபிடியினடி போற்றுமணவாளா
அறுகுபிறை யாத்தி அலைசலமு மார்த்தஅடர்சடையி னார்க்குமறிவீவாய்
அடரவரு போர்க்கை அசுரர்கிளை மாய்த்துஅமரர்சிறை மீட்டபெருமாளே.
