பாடல் 1040
நாரா லேதோல் நீரா லேயாம்
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- மலஹரி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதி - 2 களைதானா தானா தானா தானாதானா தானத்தனதான
பாடல் வரிகள்
நாரா லேதோல் நீரா லேயாம்நானா வாசற்குடிலுடே
ஞாதா வாயே வாழ்கா லேகாய்நாய்பேய் சூழ்கைக்கிடமாமுன்
தாரா ரார்தோ ளீரா றானேசார்வா னோர்நற்பெருவாழ்வே
தாழா தேநா யேனா வாலேதாள்பா டாண்மைத்திறல்தாராய்
பாரே ழோர்தா ளாலே யாள்வோர்பாவார்வேதத்தயனாரும்
பர்ழு டேவா னூடே பர்ருடேயூர் பாதத்தினைநாடாச்
சீரார் மாதோ டேவாழ் வார்நீள்சேவூர் வார்பொற்சடையீசர்
சேயே வேளே பூவே கோவேதேவே தேவப்பெருமாளே.
