பாடல் 1018
கற்பார்மெய்ப் பாட்டைத் தவறிய
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்தானத் தாத்தத் தனதனதத்தானத் தாத்தத் தனதனதத்தானத் தாத்தத் தனதனதனதான
பாடல் வரிகள்
கற்பார்மெய்ப் பாட்டைத் தவறியசொற்பாகைக் காட்டிப் புழுகொடுகஸ்தூரிச் சேற்றைத் தடவியஇளநீரைக்
கட்சேலைக் காட்டிக் குழலழகைத்தோளைக் காட்டித் தரகொடுகைக்காசைக் கேட்டுத் தெருவினில்மயில்போலே
நிற்பாருக் காட்பட் டுயரியவித்தாரப் பூக்கட் டிலின்மிசைநெட்டூரக் கூட்டத் தநவரதமுமாயும்
நெட்டாசைப் பாட்டைத் துரிசறவிட்டேறிப் போய்ப்பத் தியருடன்நெக்கோதிப் போற்றிக் கழலிணைபணிவேனோ
வெற்பால்மத் தாக்கிக் கடல்கடைமைச்சாவிக் காக்கைக் கடவுளைவிட்டார்முக் கோட்டைக் கொருகிரியிருகாலும்
விற்போலக் கோட்டிப் பிறகொருசற்றேபற் காட்டித் தழலெழுவித்தார்தத் வார்த்தக் குருபரனெனவோதும்
பொற்பாபற் றாக்கைப் புதுமலர்பெட்டேயப் பாற்பட் டுயரியபொற்றோளிற் சேர்த்துக் கருணைசெயெனமாலாய்ப்
புட்கானத் தோச்சிக் கிரிமிசைபச்சேனற் காத்துத் திரிதருபொற்பூவைப் பேச்சுக் குருகியபெருமாளே.
