Song 986
விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்
- Sthalam
- எழுகரைநாடு
- Raagam
- மனோலயம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதிதனதன தாத்தன தனதன தாத்தனதனதன தாத்தனதந்ததான
Lyrics
விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்விழிபுனல் தேக்கிடஅன்புமேன்மேல்
மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கறவிழைவுகு ராப்புனையுங்குமார
முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகைமுலைநுகர் பார்த்திபஎன்றுபாடி
மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்படமுழுதும லாப்பொருள் தந்திடாயோ
பரகதி காட்டிய விரகசி லோச்சயபரமப ராக்ரமசம்பராரி
படவிழி யாற்பொரு பசுபதி போற்றியபகவதி பார்ப்பதிதந்தவாழ்வே
இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிடஎழுகிரி யார்ப்பெழவென்றவேலா
இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றியஎழுகரை நாட்டவர்தம்பிரானே.
