Song 983
நடை தகதகிட
- Sthalam
- இராமேசுரம்
- Raagam
- ஆனந்த பைரவி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - சதுஸ்ரத்ருவம் - கண்டநடை (35)(எடுப்பு - /4/4/4 0 )
Lyrics
நடை தகதகிட
தானதன தானதன தானதன தானதனதானதன தானதன தானதன தானதனதானதன தானதன தானதன தானதனதனதான
வாலவயதாகி தாகியழ காகிமத னாகிபணிவாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடுபொருள்தேடி
வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலைமாதர்களை மேவியவ ராசைதனி லேசுழலசிலநாள்போய்த்
தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிருகால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதிசூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரியுறுநாளிற்
சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவுசோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல்சூழலுற மூலகசு மாலமென நாறியுடலழிவேனோ
நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரையாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகெனநாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடுமிளையோனே
நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுதலீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறிஞானகுற மாதைதின காவில்மண மேவுபுகழ்மயில்வீரா
ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழுமோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில்பொடியாக
ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளைபாணிதிரு மார்பனரி கோசன்மரு காஎனவெயோதமறை ராமெசுர மேவுகும ராவமரர்பெருமாளே.
