Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 978

வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - கண்டசாபு (2 1/2)தாத்தனத் தானதன தாத்தனத் தானதனதாத்தனத் தானதனதனதான

Lyrics

வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறுமாப்புடைத் தாளரசர்பெருவாழ்வும்

மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல்வாழ்க்கைவிட் டேறுமடியவர்போலக்

கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினைகோத்தமெய்க் கோலமுடன்வெருபக்

கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவருகூத்தினிப் பூரையிடஅமையாதோ

தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசைசாய்த்தொடுப் பாரவுநிள்கழல்தாவிச்

சாற்றுமக் கோரவுரு கூற்றுதை தார்மவுலிதாழ்க்கவஜ் ராயுதனுமிமையோரும்

ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடுமாய்க்குடிக் காவலவுததிமீதே

ஆர்க்குமத் தானவரை வேற் கரத் தால்வரையைஆர்ப்பெழச் சாடவலபெருமாளே.

All songs →