Song 972
கொந்தள வோலை குலுங்கிட வாளிச்
- Sthalam
- இலஞ்சி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தன தான தனந்தன தானத்தந்தன தான தனந்தன தானத்தந்தன தான தனந்தன தானத்தனதான
Lyrics
கொந்தள வோலை குலுங்கிட வாளிச்சங்குட னாழி கழன்றிட மேகக்கொண்டைகள் மாலை சரிந்திட வாசப்பனிநீர்சேர்
கொங்கைகள் மார்பு குழைந்திட வாளிக்கண்கயல் மேனி சிவந்திட கோவைக்கொஞ்சிய வாயி ரசங்கொடு மோகக்கடலு¡டே
சந்திர ஆர மழிந்திட நூலிற்பங்கிடை யாடை துவண்டிட நேசத்தந்திட மாலு ததும்பியு மூழ்குற்றிடுபோதுன்
சந்திர மேனி முகங்களு நீலச்சந்த்ரகி மேல்கொ டமர்ந்திடு பாதச்சந்திர வாகு சதங்கையு மோசற்றருள்வாயே
சுந்தரர் பாட லுகந்திரு தாளைக்கொண்டுநல் தூது நடந்தவ ராகத்தொந்தமொ டாடி யிருந்தவள் ஞானச்சிவகாமி
தொண்டர்க ளாக மமர்ந்தவள் நீலச்சங்கரி மோக சவுந்தரி கோலச்சுந்தரி காளி பயந்தரு ளானைக்கிளியோனே
இந்திர வேதர் பயங்கெட சூரைச்சிந்திட வேல்கொ டெறிந்துநல் தோகைக்கின்புற மேவி யிருந்திடு வேதப்பொருளோனே
எண்புன மேவி யிருந்தவள் மோகப்பெண்திரு வாளை மணந்திய லார்சொற்கிஞ்சியளாவு மிலஞ்சி விசாகப்பெருமாளே.
