Song 970
வேனின்மத னைந்து பாணம்விட நொந்து
- Sthalam
- ஸ்ரீ புருஷமங்கை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தந்த தானதன தந்ததானதன தந்ததனதான
Lyrics
வேனின்மத னைந்து பாணம்விட நொந்துவீதிதொறு நின்றமடவார்பால்
வேளையென வந்து தாளினில் விழுந்துவேடைகெட நண்புபலபேசித்
தேனினு மணந்த வாயமுத முண்டுசீதள தனங்களினின்மூழ்கித்
தேடிய தனங்கள் பாழ்பட முயன்றுசேர்கதிய தின்றியுழல்வேனோ
ஆனிரை துரந்து மாநில மளந்தொராலிலையி லன்றுதுயில்மாயன்
ஆயர்மனை சென்று பால்தயி ரளைந்தஆரண முகுந்தன்மருகோனே
வானவர் புகழ்ந்த கானவர் பயந்தமானொடு விளங்குமணிமார்பா
மாமறை முழங்கு ஸ்ரீபுருட மங்கைமாநக ரமர்ந்தபெருமாளே.
