Song 963
ஏலப்பனி நீரணி மாதர்கள்
- Sthalam
- மதுரை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானத்தன தானன தானனதானத்தன தானன தானனதானத்தன தானன தானனதனதான
Lyrics
ஏலப்பனி நீரணி மாதர்கள்கானத்தினு மேயுற வாடிடுமீரத்தினு மேவளை சேர்கரமதனாலும்
ஏமக்கிரி மீதினி லேகருநீலக்கய மேறிய னேரெனஏதுற்றிடு மாதன மீதினுமயலாகிச்
சோலைக்குயில் போல்மொழி யாலுமெதூசுற்றிடு நூலிடை யாலுமெதோமிற்கத லீநிக ராகியதொடையாலும்
சோமப்ரபை வீசிய மாமுகசாலத்திலு மாகடு வேல்விழிசூதத்தினு நானவ மேதினமுழல்வேனோ
ஆலப்பணி மீதினில் மாசறுமாழிக்கிடை யேதுயில் மாதவனானைக்கினி தாயுத வீயருள்நெடுமாயன்
ஆதித்திரு நேமியன் வாமனனீலப்புயல் நேர்தரு மேனியன்ஆரத்துள வார்திரு மார்பினன்மருகோனே
கோலக்கய மாவுரி போர்வையர்ஆலக்கடு வார்கள் நாயகர்கோவிற்பொறி யால்வரு மாசுதகுமரேசா
கூர்முத்தமிழ் வாணர்கள் வீறியசீரற்புத மாநக ராகியகூடற்பதி மீதினில் மேவியபெருமாளே.
