Song 957
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதி 2 களை(எடுப்பு - 3/4 இடம்)தானதன தத்த தானதன தத்ததானதன தத்ததனதான
Lyrics
ஆனைமுக வற்கு நேரிளைய பத்தஆறுமுக வித்தகமரேசா
ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்ஆரணமு ரைத்தகுருநாதா
தானவர் குலத்தை வாள்கொடு துணித்தசால்சதுர் மிகுத்ததிறல்வீரா
தாளிணைக ளுற்று மேவியப தத்தில்வாழ்வொடு சிறக்கஅருள்வாயே
வானெழு புவிக்கு மாலுமய னுக்கும்யாவரொரு வர்க்குமறியாத
மாமதுரை சொக்கர் மாதுமை களிக்கமாமயில் நடத்துமுருகோனே
தேனெழு புனத்தில் மான்விழி குறத்திசேரமரு வுற்றதிரள்தோளா
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தைவேல்கொடு தணித்தபெருமாளே.
