Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 955

உ ரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - ஆதிதனத்த தந்தன தனதன தந்தத்தனத்த தந்தன தனதன தந்தத்தனத்த தந்தன தனதன தந்தத்தனதான

Lyrics

உ ரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத்தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட்குருடாகி

உ ரத்த வெண்பலு நழுவிம தங்கெட்டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட்டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித்தமுமேல்கொண்

டரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப்பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற்றடுத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித்தனைவோரும்

அசுத்த னென்றிட வுணர்வத குன்றித்துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக்கவத்தை வந்துயி ரலமரு மன்றைக்கருள்வாயே

திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட்டிகுதீதோ

திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்டிடக்கை துந்துமி முரசு முழங்கச்செருக்க ளந்தனில் நிருதர் தயங்கச்சிலபேய்கள்

தரித்து மண்டையி லுதிர மருந்தத்திரட்ப ருந்துகள் குடர்கள் பிடுங்கத்தருக்கு சம்புகள் நிணமது சிந்தப்பொரும்வேலா

தடச்சி கண்டியில் வயலியி லன்பைப்படைத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற்றனிச்ச யந்தனி லினிதுறை கந்தப்பெருமாளே.

All songs →