Song 948
வனப்புற்றெழு கேத மேவு கோகிலம்
- Sthalam
- திருப்புக்கொளியூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்தத்தன தான தான தானனதனத்தத்தன தான தான தானனதனத்தத்தன தான தான தானனதந்ததான
Lyrics
வனப்புற்றெழு கேத மேவு கோகிலம்அழைக்கப்பொரு மார னேவ தாமலர்மருத்துப்பயில் தேரி லேறி மாமதிதொங்கலாக
மறுத்துக்கடல் பேரி மோத வேயிசைபெருக்கப்படை கூடி மேலெ ழாவணிவகுத்துக்கொடு சேம மாக மாலையில்வந்துகாதிக்
கனக்கப்பறை தாய ளாவ நீள்கனகருப்புச்சிலை காம ரோவில் வாளிகள்களித்துப்பொர வாசம் வீசு வார்குழல்மங்கைமார்கள்
கலைக்குட்படு பேத மாகி மாயுமதுனக்குப்ரிய மோக்ரு பாக ராஇதுகடக்கப்படு நாம மான ஞானமதென்றுசேர்வேன்
புனத்திற்றினை காவ லான காரிகைதனப்பொற்குவ டேயு மோக சாதககுனித்தப்பிறை சூடும் வேணி நாயகர்நன்குமாரா
பொறைக்குப்புவி போலு நீதி மாதவர்சிறக்கத்தொகு பாசி சோலை மாலைகள்புயத்துற்றணி பாவ சூர னாருயிர்கொண்டவேலா
சினத்துக்கடி வீசி மோது மாகடலடைத்துப்பிசி தாச னாதி மாமுடிதெறிக்கக்கணை யேவு வீர மாமனும்உ ந்திமீதே
செனித்துச்சதுர் வேத மோது நாமனுமதித்துப்புகழ் சேவ காவி ழாமலிதிருப்புக்கொளி மேவு தேவர்கள்தம்பிரானே.
