Song 940
கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல
- Sthalam
- பட்டாலியூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தான தனன தனதன தத்தான தனன தனதனதத்தான தனன தனதனதனதான
Lyrics
கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசலகற்பூர களப மணிவனமணிசேரக்
கட்டார வடமு மடர்வன நிட்டூர கலக மிடுவனகச்சோடு பொருது நிமிர்வனதனமாதர்
கொத்தூரு நறவ மெனவத ரத்தூறல் பருகி யவரொடுகொற்சேரி யுலையில் மெழுகெனவுருகாமே
கொக்காக நரைகள் வருமன மிக்காய விளமை யுடன்முயல்குற்றேவல் அடிமை செயும்வகையருளாதோ
அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதிலச்சான வயலி நகரியிலுறைவேலா
அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய பரவையொடக்காகி விரக பரிபவமறவேபார்
பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருடருபற்றாய பரம பவுருஷகுருநாதா
பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடுபட்டாலி மருவு மமரர்கள்பெருமாளே.
