Song 936
கலக சம்ப்ரமத் தாலேவி லோசன
- Sthalam
- விஜயமங்கலம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தந்தனத் தானான தானனதனன தந்தனத் தானான தானனதனன தந்தனத் தானான தானனதனதான
Lyrics
கலக சம்ப்ரமத் தாலேவி லோசனமலர்சி வந்திடப் பூணார மானவைகழல வண்டெனச் சா¡£ரம் வாய்விடஅபிராமக்
கனத னங்களிற் கோமாள மாகியெபலந கம்படச் சீரோடு பேதககரண முஞ்செய்துட் பாலு¡று தேனிதழமுதூறல்
செலுவி மென்பணைத் தோளோடு தோள்பொரநிலைகு லைந்திளைத் தேராகு மாருயிர்செருகு முந்தியிற் போய்வீழு மாலுடனநுராகந்
தெரிகு மண்டையிட் டாராத சேர்வையிலுருகி மங்கையர்க் காளாகி யேவல்செய்திடினு நின்கழற் சீர்பாத நானினிமறவேனே
உ லக கண்டமிட் டாகாச மேல்விரிசலதி கண்டிடச் சேராய மாமவருடன்ம டிந்திடக் கோபாலர் சேரியில்மகவாயும்
உ ணர்சி றந்தசக் ராதார நாரணன்மருக மந்திரக் காபாலி யாகியஉ ரக கங்கணப் பூதேசர் பாலகவயலு¡ரா
விலைத ருங்கொலைப் போர்வேடர் கோவெனஇனையு மங்குறப் பாவாய்வி யாகுலம்விடுவி டென்றுகைக் கூர்வேலை யேவியஇளையோனே
விறல்சு ரும்புநற் க்¡£தேசி பாடியவிரைசெய் பங்கயப் பூவோடை மேவியவிஜய மங்கலத் தேவாதி தேவர்கள்பெருமாளே.
