Song 933
காந்தட் கரவளை சேந்துற் றிடமத
- Sthalam
- திருப்பாண்டிக்கொடுமுடி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாந்தத் தனதன தாந்தத் தனதனதாந்தத் தனதனதனதான
Lyrics
காந்தட் கரவளை சேந்துற் றிடமதகாண்டத் தரிவையருடனூசி
காந்தத் துறவென வீழ்ந்தப் படிகுறிகாண்டற் கநுபவவிதமேவிச்
சாந்தைத் தடவிய கூந்தற் கருமுகில்சாய்ந்திட் டயில்விழிகுழைமீதே
தாண்டிப் பொரவுடை தீண்டித் தனகிரிதாங்கித் தழுவுதலொழியேனோ
மாந்தர்க் கமரர்கள் வேந்தற் கவரவர்வாஞ்சைப் படியருள்வயலு¡ரா
வான்கிட் டியபெரு மூங்கிற் புனமிசைமான்சிற் றடிதொழுமதிகாமி
பாந்தட் சடைமுடி யேந்திக் குலவியபாண்டிக் கொடுமுடியுடையாரும்
பாங்கிற் பரகுரு வாங்கற் பனையொடுபாண்சொற் பரவியபெருமாளே.
