Song 922
புணரியும னங்கனம் புஞ்சுரும் புங்கருங்
- Sthalam
- தென்கடம்பந்துறை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்ன தந்தனந் தந்தனந் தந்தனந்தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்தனதான
Lyrics
புணரியும னங்கனம் புஞ்சுரும் புங்கருங்கயலினொடு கெண்டையுஞ் சண்டனுங் கஞ்சமும்புதுநிலவ ருந்தியுந் துஞ்சுநஞ் சும்பொருப்பெறிவேலும்
பொருவெனஇ கன்றகன் றங்குமிங் குஞ்சுழன்றிடைகடைசி வந்துவஞ் சம்பொதிந் திங்கிதம்புவியிளைஞர் முன்பயின் றம்பொனின் கம்பிதக்குழைமோதிக்
குணலையொடு மிந்த்ரியஞ் சஞ்சலங் கண்டிடும்படியமர்பு ரிந்தருஞ் சங்கடஞ் சந்ததங்கொடுமைசெய்து சங்கொடுஞ் சிங்கிதங் குங்கடைக்கணினார்பால்
குலவுபல செந்தனந் தந்துதந் தின்புறுந்த்ரிவிதகர ணங்களுங் கந்தநின் செம்பதங்குறுகும்வகை யந்தியுஞ் சந்தியுந் தொந்தமற்றமைவேனோ
துணர்விரிக டம்பமென் தொங்கலும் பம்புறும்புழுகுமச லம்பசுஞ் சந்தனங் குங்குமந்தொகுகளப முந்துதைந் தென்றுநன் கொன்றுபத்திருதோளுந்
தொலைவில்சண்மு கங்களுந் தந்த்ரமந் த்ரங்களும்பழநிமலை யும்பரங் குன்றமுஞ் செந்திலுந்துதிசெயுமெ யன்பர்தஞ் சிந்தையுஞ் சென்றுசெய்ப்பதிவாழ்வாய்
கணபணபு யங்கமுங் கங்கையுந் திங்களுங்குரவுமறு குங்குறுந் தும்பையுங் கொன்றையுங்கமழ்சடில சம்புவுங் கும்பிடும் பண்புடைக்குருநாதா
கனகுடகில் நின்றகுன் றந்தருஞ் சங்கரன்குறுமுனிக மண்டலங் கொண்டுமுன் கண்டிடுங்கதிசெய்நதி வந்துறுந் தென்கடம் பந்துறைப்பெருமாளே.
