Song 920
காலன் வேற்கணை யீர்வா ளாலமு
- Sthalam
- பூவர்ளுர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
பாடல் 920 ( பூவாளுர் )தான தாத்தன தானா தானனதான தாத்தன தானா தானனதான தாத்தன தானா தானனதனதான
Lyrics
காலன் வேற்கணை யீர்வா ளாலமுநேர்க ணாற்கொலை சூழ்மா பாவிகள்காம சாத்திர வாய்ப்பா டேணிகளெவரேனுங்
காத லார்க்கும்வி னாவாய் கூறிகள்போக பாத்திர மர்மு தேவிகள்காசு கேட்டிடு மாயா ரூபிகளதிமோக
மாலை மூட்டிகள் வானூ டேநிமிர்ஆனை போற்பொர நேரே போர்முலைமார்பு காட்டிகள் நானா பேதகமெனமாயா
மாப ராக்கிக ளோடே சீரியபோது போக்குத லாமோ நீயினிவாவெ னாப்பரி வாலே யாள்வதுமொருநாளே
பால றாத்திரு வாயா லோதியஏடு நீர்க்கெதிர் போயே வாதுசெய்பாடல் தோற்றிரு நாலா மாயிரசமண்மூடர்
பாரின் மேற்கழு மீதே யேறிடநீறி டாத்தமிழ் நாடீ டேறிடபாது காத்தரு ளாலே கூனிமிரிறையோனும்
ஞால மேத்திய தோர்மா தேவியும்ஆல வாய்ப்பதி வாழ்வா மாறெணுஞான பாக்கிய பாலா வேலவமயில்வீரா
ஞான தீக்ஷ¢த சேயே காவிரியாறு தேக்கிய கால்வாய் மாமழநாடு போற்றிய பூவா ளுருறைபெருமாளே.
