Song 90
முகிலாமெனு மளகங் காட்டி
- Sthalam
- திருச்செந்தூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனாதன தனனந் தாத்ததனனாதன தனனந் தாத்ததனனாதன தனனந் தாத்ததனதான
Lyrics
முகிலாமெனு மளகங் காட்டிமதிபோலுயர் நுதலுங் காட்டிமுகிழாகிய நகையுங் காட்டிஅமுதூறு
மொழியாகிய மதுரங் காட்டிவிழியாகிய கொடியுங் காட்டிமுகமாகிய கமலங் காட்டிமலைபோலே
வகையாமிள முலையுங் காட்டியிடையாகிய கொடியுங் காட்டிவளமானகை வளையுங் காட்டியிதமான
மணிசேர்கடி தடமுங் காட்டிமிகவேதொழி லதிகங் காட்டுமடமாதர்கள் மயலின் சேற்றிலுழல்வேனே
நகையால்மத னுருவந் தீத்தசிவனாரருள் சுதனென் றார்க்குநலநேயரு ளமர்செந் தூர்க்குளுறைவோனே
நவமாமணி வடமும் பூத்ததனமாதெனு மிபமின் சேர்க்கைநழுவாவகை பிரியங் காட்டுமுருகோனே
அகமேவிய நிருதன் போர்க்குவரவேசமர் புரியுந் தோற்றமறியாமலு மபயங் காட்டிமுறைகூறி
அயிராவத முதுகின் தோற்றியடையாமென இனிதன் பேத்துமமரேசனை முழுதுங் காத்தபெருமாளே.
