Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 897

விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - கண்டசாபு (2 1/2)தகிட-1 1/2, தக-1தந்தனா தத்தனா தந்தனா தத்தனாதந்தனா தத்தனாதந்ததான

Lyrics

விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையுமின்சரா சர்க்குலமும்வந்துலாவி

விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியுமிஞ்சநீ விட்டவடிவங்களாலே

வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவிவந்துதா இக்கணமெயென்றுகூற

மைந்தர்தா விப்புகழ தந்தைதா யுற்றுருகிவந்துசே யைத்தழுவல்சிந்தியாதோ

அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவருமங்கிபார் வைப்பறையர்மங்கிமாள

அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ்அண்டரே றக்கிருபைகொண்டபாலா

எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர்எந்தைபா கத்துறையுமந்தமாது

எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்எந்தைபூ சித்துமகிழ்தம்பிரானே.

All songs →