Song 886
மருவு லாவிடு மோதி குலைப்பவர்
- Sthalam
- சப்தஸ்தானம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தானன தான தனத்தனதனன தானன தான தனத்தனதனன தானன தான தனத்தனதனதான
Lyrics
மருவு லாவிடு மோதி குலைப்பவர்சமர வேலெனு நீடு விழிச்சியர்மனதி லேகப டூரு பரத்தையரதிகேள்வர்
மதன னோடுறழ் பூச லிடைச்சியர்இளைஞ ராருயிர் வாழு முலைச்சியர்மதுர மாமொழி பேசு குணத்தியர்தெருமீதே
சருவி யாரையும் வாவெ னழைப்பவர்பொருளி லேவெகு ஆசை பரப்பிகள்சகல தோதக மாயை படிப்பரையணுகாதே
சலச மேவிய பாத நி¨த்துமுன்அருணை நாடதி லோது திருப்புகழ்தணிய வோகையி லோத எனக்கருள்புரிவாயே
அரிய கானக மேவு குறத்திதன்இதணி லேசில நாளு மனத்துடன்அடவி தோறுமெ வாழியல் பத்தினிமணவாளா
அசுரர் வீடுகள் நூறு பொடிப்படஉ ழவர் சாகர மோடி யொளித்திடஅமரர் நாடுபொன் மாரி மிகுத்திடநினைவோனே
திருவின் மாமர மார்பழ னப்பதிஅயிலு சோறவை யாளுது றைப்பதிதிசையி னான்மறை தேடிய முற்குடிவிதியாதிச்
சிரமு மாநிலம் வீழ்தரு மெய்ப்பதிபதும நாயகன் வாழ்பதி நெய்ப்பதிதிருவை யாறுட னேழுதி ருப்பதிபெருமாளே.
