Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 875

கடகரிம ருப்பிற்க திர்த்துப்ர மிக்கமிக

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனன தத்தத்த தத்தத்த தத்ததனதனதனன தத்தத்த தத்தத்த தத்ததனதனதனன தத்தத்த தத்தத்த தத்ததனதனதான

Lyrics

கடகரிம ருப்பிற்க திர்த்துப்ர மிக்கமிகவுரமிடநெ ருக்கிப்பி டித்துப்பு டைத்துவளர்கனககுட மொத்துக்க னத்துப்பெ ருத்தமணியணியாலே

கதிர்திகழு செப்பைக்க திக்கப்ப தித்துமகிழ்கமலமுகை பட்சத்தி ருத்திப்பொ ருத்துமுலைகமழ்விரைகொள் செச்சைக்க லப்பைப்பொ தித்ததனைவிலகாது

கடுவைவடு வைப்பற்றி விற்சிக்க வைத்தசெயலெனநிறமி யற்றிக்கு யிற்றிப்பு ரட்டிவருகயல்விழிவெ டுட்டித்து ரத்திச்செ விக்குழையின்மிசைதாவுங்

களமதன னுக்குச்ச யத்தைப்ப டைத்துலவுகடுமொழிப யிற்றக்க ளைத்துக்கொ டிச்சியர்கள்கணியினில் கப்பட்ட ழுத்தத்து யர்ப்படுவதொழியேனோ

அடலைபுனை முக்கட்ப ரற்குப்பொ ருட்சொலருமறைதனையு ணர்த்திச்செ கத்தைப்பெ ருத்தமயில்அதனைமுன டத்திக்க ணத்திற்றி ரித்துவருமழகோனே

அபகடமு ரைத்தத்த மெத்தப்ப டைத்துலகிலெளியரைம ருட்டிச்செ கத்திற்பி ழைக்கவெணுமசடர்தம னத்தைக்க லக்கித்து ணித்தடருமதிசூரா

விடவரவ ணைக்குட்டு யிற்கொட்க்ரு பைக்கடவுள்உ லவுமலை செப்பைச்செ விக்கட்செ றித்துமிகவிரைவிலுவ ணத்திற்சி றக்கப்ரி யத்தில்வருமொருமாயோன்

விழைமருக கொக்கிற்ச முத்ரத்தி லுற்றவனைநெறுநெறென வெட்டுக்ர சத்தித்த னிப்படையவிடையவர்தி ருச்சத்தி முத்தத்தி னிற்குலவுபெருமாளே.

All songs →