Song 867
மாலைதனில் வந்து வீதிதனில் நின்று
- Sthalam
- கும்பகோணம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தந்த தானதன தந்ததானதன தந்ததனதான
Lyrics
மாலைதனில் வந்து வீதிதனில் நின்றுவாசமலர் சிந்துகுழல்கோதி
வாரிருத னங்கள் பூணொடுகு லுங்கமால்பெருகி நின்றமடவாரைச்
சாலைவழி வந்து போமவர்க ணின்றுதாழ்குழல்கள் கண்டுதடுமாறித்
தாகமயல் கொண்டு மாலிருள ழுந்திசாலமிக நொந்துதவியாமற்
காலையிலெ ழுந்து னாமமெமொ ழுந்திகாதலுமை மைந்தஎனவோதிக்
காலமுமு ணர்ந்து ஞானவெளி கண்கள்காண அரு ளென்றுபெறுவேனோ
கோலமுட னன்று சூர்படையின் முன்புகோபமுட னின்றகுமரேசா
கோதையிரு பங்கின் மேவவளர் கும்பகோணநகர் வந்தபெருமாளே.
