Song 865
கெண்டைநெ ரொத்தவிழி மங்கைமோ கக்கலவை
- Sthalam
- கும்பகோணம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தனா தத்ததன தந்தனா தத்ததனதந்தனா தத்ததனதனதான
Lyrics
கெண்டைநெ ரொத்தவிழி மங்கைமோ கக்கலவைகெந்தவா சப்புழுகுமணநாறுங்
கிம்பு¡£ சக்களப கொங்கையா னைச்சிறிதுகிஞ்சுகா ணப்பெருகியடியேனும்
மண்டிமோ சக்கலவி கொண்டுகா மித்துருகிவண்டனா கப்புவியிலுழலாமல்
வந்துஞா னப்பொருளி லொன்றுபோ தித்துனதுமஞ்சுதா ளைத்தினமுமருள்வாயே
அண்டர்வா ழப்பிரபை சண்டமே ருக்கிரியிளைந்துவீ ழப்பொருதகதிர்வேலா
அஞ்சுவா யிற்பரனை நெஞ்சிலு¡ றித்தவசினன்புளா ரைச்சிறையிடசுரோரைக்
கொண்டுபோய் வைத்தகழு நெஞ்சிலே றக்கழுகுகொந்தியா டத்தலையையரிவோனே
கொண்டல்சூ ழக்கழனி சங்குலா விப்பரவுகும்பகோ ணத்திலுறைபெருமாளே.
