Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 862

தனுநுதல் வெயர்வெழ விழிகுழி தரவளை

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தனதன தனதன தனதனதத்தத் தத்தன தத்தத் தத்தனதந்ததான

Lyrics

தனுநுதல் வெயர்வெழ விழிகுழி தரவளைசத்திக் கச்சில தித்திக் கப்படும்அன்புபேசித்

தழுவிய மகளிர்த முகிழ்முலை யுரமிசைதைக்கச் சர்க்கரை கைக்கப் பட்டனதொண்டையூறல்

கனவிலு நுகர்தரு கலவியின் வலையிடைகட்டுப் பட்டுயிர் தட்டுப் பட்டழிகின்றதோதான்

கதிபெற விதியிலி மதியிலி யுனதிருகச்சுற் றச்சிறு செச்சைப் பத்மபதம்பெறேனோ

முனைமலி குலிசைதன் ம்ருகமத புளகிதமுத்தச் சித்ரத னத்துக் கிச்சிதஅம்புராசி

முறையிட முதுநிசி சரர்திரள் முதுகிடமுட்டப் பொட்டெழ வெட்டிக் குத்துமடங்கல்வீரா

அனுபவ மளிதரு நிகழ்தரு மொருபொருள்அப்பர்க் கப்படி யொப்பித் தர்ச்சனைகொண்டநாதா

அகிலமு மழியினு நிலைபெறு திரிபுவனத்துப் பொற்புறு சித்திச் சித்தர்கள்தம்பிரானே.

All songs →