Song 860
படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும்
- Sthalam
- திருவிடைமருதூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்தனதனன தனதனன தந்தனந் தந்தனந்தனதனன தனதனன தந்தனந் தந்தனந்தந்ததான
Lyrics
படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும்தமரசது மறையமரர் சங்கமுஞ் சம்புவும்பரவரிய நிருபன்விர கன்சுடுஞ் சம்பனன்செம்பொன்மேனிப்
பரமனெழில் புனையுமர வங்களுங் கங்கையுந்திருவளரு முளரியொடு திங்களுங் கொன்றையும்பரியகுமி ழறுகுகன தும்பையுஞ் செம்பையுந்துன்முலச்
சடைமுடியி லணியுநல சங்கரன் கும்பிடுங்குமரனறு முகவன்மது ரந்தருஞ் செஞ்சொலன்சரவணையில் வருமுதலி கொந்தகன் கந்தனென்றுய்ந்துபாடி
தணியவொலி புகலும்வித மொன்றிலுஞ் சென்றிலன்பகிரவொரு தினையளவு பண்புகொண் டண்டிலன்தவநெறியி லொழுகிவழி பண்படுங் கங்கணஞ்சிந்தியாதோ
கடுகுபொடி தவிடுபட மந்திரந் தந்திரம்பயிலவரு நிருதருட லம்பிளந் தம்பரங்கதறிவெகு குருதிநதி பொங்கிடுஞ் சம்ப்ரமங்கண்டுசேரக்
கழுகுநரி கொடிகருட னங்கெழுந் தெங்குநின்றலகைபல திமிலைகொடு தந்தனந் தந்தனங்கருதியிசை பொசியுநசை கண்டுகண் டின்புறுந்துங்கவேலா
அடல்புனையு மிடைமருதில் வந்திணங் குங்குணம்பெரியகுரு பரமகுமர சிந்துரஞ் சென்றடங்கடவிதனி லுறைகுமரி சந்திலங் குந்தனந்தங்குமார்பா
அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்கயங்கருணைபொழி வனகழலி லந்தமுந் தம்பமென்றழகுபெற நெறிவருடி யண்டருந் தொண்டுறுந்தம்பிரானே.
