Song 858
அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு
- Sthalam
- திருவிடைமருதூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தனதனன தனதனன தனதனனதான தானனா தான தானனா-------- 3 முறை --------தனதன தனதான
Lyrics
அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொருஆக மாகியோர் பால ரூபமாய்
அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடையஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளரஆளு மேளமாய் வால ரூபமாய்அவரொரு பெரியோராய்
அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகிஆவி யாயவோர் தேவி மாருமாய்
விழுசுவரை யரிவவையர்கள் படுகுழியை நிலைமையெனவீடு வாசலாய் மாட கூடமாய்
அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகிஆசை யாளராய் ஊசி வாசியாய்அவியுறு சுடர்போலே
வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில்மேலை வீடுகேள் கீழை வீடுகேள்
திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடுசீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொருவீணி யார்சொலே மேல தாயிடாவிதிதனை நினையாதே
மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமையுள தெனும வரை விடும்விழலை யதனின்வருவார்கள் போகுவார் காணு மோஎனா
விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடெனமேள மேசொலா யாளி வாயராய்மிடையுற வருநாளில்
வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசிலவாத மூதுகா மாலை சோகைநோய்
பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்பீளை சாறிடா ஈளை மேலிடா
வழவழென உ மிழுமது கொழகொழென ஒழுகிவிழவாடி யூனெலாம் நாடி பேதமாய்மனையவள் மனம்வேறாய்
மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில்மாதர் சீயெனா வாலர் சீயெனா
கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடுகாடு வாவெனா வீடு போவெனா
வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகிவாயு மேலிடா ஆவி போகுநாள்மனதர்கள் பலபேச
இறுதியதொ டறுதியென உ றவின்முறை கதறியழஏழை மாதராள் மோதி மேல்விழா
எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமறஈமொ லேலெனா வாயை ஆவெனா
இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறையஈம தேசமே பேய்கள் சூழ்வதாய்எரிதனி லிடும்வாழ்வே
இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும்ஏசி டார்களோ பாச நாசனே
இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியறஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்ஏக நாயகா லோக நாயகாஇமையவர் பெருமாளே.
