Song 856
மதியஞ் சத்திரு நிறைந்த மாமுக
- Sthalam
- திருப்பந்தணை நல்லு¡ர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனந் தத்தன தனந்த தானனதனனந் தத்தன தனந்த தானனதனனந் தத்தன தனந்த தானனதனதான
Lyrics
மதியஞ் சத்திரு நிறைந்த மாமுகமயிலஞ் சக்கிளி யினங்க ளாமெனமதுரஞ் செப்பிய மடந்தை மேனகைரதிபோல
மருவும் பொற்குட மெழுந்த மாமுலைவளர்வஞ் சிக்கொடி நடந்த வாறெனவருதுங் கக்கட லணங்கு போல்பவர்தெருவூடே
நிதமிந் தப்படி யிருந்து வாறவர்பொருள்தங் கப்பணி கலந்து போய்வரநெறிதந் திட்டவர் வசங்க ளாமெனவுழலாதே
நிதிபொங் கப்பல தவங்க ளாலுனைமொழியும் புத்திகள் தெரிந்து நானுனைநிகர்சந் தத்தமிழ் சொரிந்து பாடவுமருள்தாராய்
நதிமிஞ் சச்சடை விரிந்த நாயகனுமையன் பிற்செயு மிகுந்த பூசனைநலமென் றுட்குளிர் சிவன்ப ராபரனருள்பாலா
நவகங் கைக்கிணை பகர்ந்த மாமணிநதிபங் கிற்குலவு கந்து காபுரிநகர்பொங் கித்த¨ழைய வந்து வாழ்வுறுமுருகோனே
கெதிதங் கத்தகு கணங்கள் வானவர்அரிகஞ் சத்தவர் முகுந்தர் நாவலர்கிளைபொங்கக் க்ருபை புரிந்து வாழ்கெனஅருள்நாதா
கெருவம் பற்றிகல் விளைந்த சூரொடுதளமஞ் சப்பொரு தெழுந்து தீயுகள்கிரவுஞ் சக்கிரி வகிர்ந்த வேலுளபெருமாளே.
