Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 852

எகினி னம்பழி நாடக மாடிகள்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தந்தன தானன தானனதனன தந்தன தானன தானனதனன தந்தன தானன தானனதனதான

Lyrics

எகினி னம்பழி நாடக மாடிகள்மயிலெ னுஞ்செய லாரகி நேரல்குல்இசையி டுங்குர லார்கட னாளிகள்வெகுமோகம்

எனவி ழுந்திடு வார்முலை மேல்துகில்அலைய வுந்திரி வாரெவ ராயினும்இளகு கண்சுழல் வார்விலை வேசியர்வலைவீசும்

அதிக வஞ்சக பாவனை யால்மயல்கொடுவி ழுந்திட ராகமு நோய்பிணியதிக முங்கொடு நாயடி யேனினியுழலாமல்

அமுத மந்திர ஞானொப தேசமும்அருளி யன்புற வேமுரு காவெனஅருள்பு குந்திட வேகழ லார்கழல்அருள்வாயே

ககன விஞ்சையர் கோவென வேகுவடவுணர் சிந்திட வேகடல் தீவுகள்கமற வெந்தழல் வேல்விடு சேவகமுருகோனே

கரிநெ டும்புலி தோலுடை யாரெனையடிமை கொண்டசு வாமிச தாசிவகடவு ளெந்தையர் பாகம்வி டாவுமையருள்பாலா

செகமு மண்டமு மோருரு வாய்நிறைநெடிய அம்புயல் மேனிய னாரரிதீருவு றைந்துள மார்பக னார்திருமருகோனே

தினைவ னந்தனில் வாழ்வளி நாயகிவளர்த னம்புதை மார்பழ காமிகுதிலக பந்தணை மாநகர் மேவியபெருமாளே.

All songs →