Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 848

சொற்பிழைவ ராம லுனைக்கனக் கத்துதித்து

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தத்ததன தான தனத்தனத் தத்ததத்ததத்ததன தான தனத்தனத் தத்ததத்ததத்ததன தான தனத்தனத் தத்ததத்ததனதான

Lyrics

சொற்பிழைவ ராம லுனைக்கனக் கத்துதித்துநிற்பதுவ ராத பவக்கடத் திற்சுழற்றிசுக்கிலவ தார வழிக்கிணக் கிக்களித்துவிலைமாதர்

துப்பிறைய தான இதழ்க்கனிக் குக்கருத்தைவைத்துமய லாகி மனத்தைவிட் டுக்கடுத்ததுற்சனமகாத கரைப்புவிக் குட்டழைத்தநிதிமேவு

கற்பகஇ ராச னெனப்படைக் குப்பெருத்தஅர்ச்சுனந ராதி யெனக்கவிக் குட்பதித்துகற்றறிவி னாவை யெடுத்தடுத் துப்படித்துமிகையாகக்

கத்திடுமெ யாக வலிக்கலிப் பைத்தொலைத்துகைப்பொருளி லாமை யெனைக்கலக் கப்படுத்துகற்பனைவி டாம லலைத்திருக் கச்சலிக்கவிடலாமோ

எற்பணிய ராவை மிதுத்துவெட் டித்துவைத்துபற்றியக ராவை யிழுத்துரக் கக்கிழித்துஎட்கரிப டாம லிதத்தபுத் திக்கதிக்குநிலையோதி

எத்தியப சாசின் முலைக்குடத் தைக்குடித்துமுற்றுயிரி லாம லடக்கிவிட் டுச்சிரித்தயிற்கணையி ராமர் சுகித்திருக் கச்சினத்ததிறல்வீரா

வெற்பெனம தாணி நிறுத்துருக் கிச்சமைத்துவர்க்கமணி யாக வடித்திருத் தித்தகட்டின்மெய்க்குலம தாக மலைக்கமுத் தைப்பதித்துவெகுகோடி

விட்கதிர தாக நிகர்த்தொளிக் கச்சிவத்தரத்தினப டாக மயிற்பரிக் குத்தரித்துமிக்கதிரு வாவ டுநற்றுறைக் குட்செழித்தபெருமாளே.

All songs →