Song 841
நூலினை யொத்த மருங்குல் தேரினை யொத்த நிதம்பம்
- Sthalam
- வேதாரணியம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானன தத்த தனந்த தானன தத்த தனந்ததானன தத்த தனந்ததனதான
Lyrics
நூலினை யொத்த மருங்குல் தேரினை யொத்த நிதம்பம்நூபுர மொய்த்த பதங்கள்இவையாலும்
நூறிசை பெற்ற பதங்கொள் மேருவை யொத்த தனங்கள்நூல்வல்ம லர்ப்பொரு துண்டம்அவையாலும்
சேலினை யொத்திடு கண்க ளாலும ழைத்திடு பெண்கள்தேனிதழ் பற்றுமொ ரின்பவ¨ல்முழ்கிச்
சீலம னைத்து மொழிந்து காமவி தத்தி லழுந்திதேறுத வத்தை யிழந்துதிரிவேனோ
வாலஇ ளப்பிறை தும்பை யாறுக டுக்கை கரந்தைவாசுகி யைப்புனை நம்பர்தருசேயே
மாவலி யைச்சிறை மண்ட ஓரடி யொட்டிய ளந்துவாளி பரப்பியி லங்கையரசானோன்
மேல்முடி பத்தும ரிந்து தோளிரு பத்தும ரிந்துவீரமி குத்தமு குந்தன்மருகோனே
மேவுதி ருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்துவேதவ னத்தில மர்ந்தபெருமாளே.
