Song 831
உ ரமுற் றிருசெப் பெனவட் டமுமொத்
- Sthalam
- எட்டிகுடி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத்தனதான
Lyrics
உ ரமுற் றிருசெப் பெனவட் டமுமொத்திளகிப் புளகித்திடமாயே
உ டைசுற் றுமிடைச் சுமையொக் கஅடுத்தமிதக் கெறுவத்துடன்வீறு
தரமொத் துபயக் களபத் தளமிக்கவனத் தருணத்தனமீதே
சருவிச் சருவித் தழுவித் தழுவித்தவமற் கவிடுத்துழல்வேனோ
அரிபுத் திரசித் தசஅக் கடவுட்கருமைத் திருமைத்துனவேளே
அடல்குக் குடநற் கொடிகட் டியனர்த்தசுரப் படையைப்பொருவோனே
பரிவுற் றவருக் கருள்வைத் தருள்வித்தகமுத் தமிழைப்பகர்வோனே
பழனத் தொளிர்முத் தணியெட் டிகுடிப்பதியிற் குமரப்பெருமாளே.
