Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 83

பெருக்கச்சஞ் சலித்துக்கந்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்தத்தந் தனத்தத்தந்தனத்தத்தந் தனத்தத்தந்தனத்தத்தந் தனத்தத்தந்தனதான

Lyrics

பெருக்கச்சஞ் சலித்துக்கந்தலுற்றுப்புந் தியற்றுப்பின்பிழைப்பற்றுங் குறைப்புற்றும்பொதுமாதர்

ப்ரியப்பட்டங் கழைத்துத்தங்கலைக்குட்டங் கிடப்பட்சம்பிணித்துத்தந் தனத்தைத்தந்தணையாதே

புரக்கைக்குன் பதத்தைத்தந்தெனக்குத்தொண் டுறப்பற்றும்புலத்துக்கண் செழிக்கச்செந்தமிழ்பாடும்

புலப்பட்டங் கொடுத்தற்கும்கருத்திற்கண் படக்கிட்டும்புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம்புரிவாயே

தருக்கிக்கண் களிக்கத்தெண்டனிட்டுத்தண் புனத்திற்செங்குறத்திக்கன் புறச்சித்தந்தளர்வோனே

சலிப்புற்றங் குரத்திற்சம்ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்சமர்த்திற்சங் கரிக்கத்தண்டியசூரன்

சிரத்தைச்சென் றறுத்துப்பந்தடித்துத்திண் குவட்டைக்கண்டிடித்துச்செந் திலிற்புக்கங்குறைவோனே

சிறக்கற்கஞ் செழுத்தத்தந்திருச்சிற்றம் பலத்தத்தன்செவிக்குப்பண் புறச்செப்பும்பெருமாளே.

All songs →