Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 825

உ ரையொ ழிந்துநின் றவர்பொரு ளெளிதென

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தந்தனந் தனதன தனதனதனன தந்தனந் தனதன தனதனதனன தந்தனந் தனதன தனதனதனதான

Lyrics

உ ரையொ ழிந்துநின் றவர்பொரு ளெளிதெனவுணர்வு கண்டுபின் திரவிய இகலருளொருவர் நண்படைந் துளதிரள் கவர்கொடுபொருள்தேடி

உ ளம கிழ்ந்துவந் துரிமையில் நினைவுறுசகல இந்த்ரதந்த் ரமும்வல விலைமகளுபய கொங்கையும் புளகித மெழமிகவுறவாயே

விரக வன்புடன் பரிமள மிகவுளமுழுகி நன்றியொன் றிடமல ரமளியில்வெகுவி தம்புரிந் தமர்பொரு சமயமதுறுநாளே

விளைத னங்கவர்ந் திடுபல மனதியரயல்த னங்களுந் தனதென நினைபவர்வெகுளி யின்கணின் றிழிதொழி லதுவறஅருள்வாயே

செருதி னைந்திடுஞ் சினவலி யசுரர்களுகமு டிந்திடும் படியெழு பொழுதிடைசெகம டங்கலும் பயமற மயில்மிசைதனிலேறித்

திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகுதெனதெ னந்தெனந் தெனதென தெனதெனதிமிதி மிந்திமிந் திமிதிமி திமியெனவருபூதங்

கரையி றந்திடுங் கடலென மருவியவுதிர மொண்டுமுண் டிடஅமர் புரிபவகலவி யன்புடன் குறமகள் தழுவியமுருகோனே

கனமு றுந்த்ரியம் பகபுர மருவியகவுரி தந்தகந் தறுமுக எனஇருகழல்ப ணிந்துநின் றமரர்கள் தொழவலபெருமாளே.

All songs →