Song 817
கூர்வாய் நாராய் வாராய் போனார்
- Sthalam
- திருவாருர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானா தானா தானா தானாதானா தானத்தனதான
Lyrics
கூர்வாய் நாராய் வாராய் போனார்கூடா ரேசற்றலஆவி
கோதா னேன்மா தாமா றானாள்கோளே கேள்மற்றிளவாடை
ஈர்வாள் போலே மேலே வீசாஏறா வேறிட்டதுதீயின்
ஈயா வாழ்வோர் பேரே பாடாஈடே றா¡¢ற்கெடலாமோ
சூர்வா ழாதே மாறா தேவாழ்சூழ்வா னோர்கட்கருள்கூருந்
தோலா வேலா வீறா ரூர்வாழ்சோதீ பாகத்துமையூடே
சேர்வாய் நீதீ வானோர் வீராசேரா ரூரைச்சுடுவார்தஞ்
சேயே வேளே பூவே கோவேதேவே தேவப்பெருமாளே.
