Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 812

இபமாந்தர் சக்ர பதிசெறி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - அங்கதாளம் (6)தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2தனதாந்த தத்த தனதனதனதாந்த தத்த தனதனதனதாந்த தத்த தனதனதனதான

Lyrics

இபமாந்தர் சக்ர பதிசெறிபடையாண்டு சக்ர வரிசைகளிடவாழ்ந்து திக்கு விசயமணரசாகி

இறுமாந்து வட்ட வணைமிசைவிரிசார்ந்து வெற்றி மலர்தொடையெழிலார்ந்த பட்டி வகைபரிமளலேபந்

தபனாங்க ரத்ந வணிகலனிவைசேர்ந்த விச்சு வடிவதுதமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழுவியபோது

தழல்தாங்கொ ளுத்தி யிடவொருபிடிசாம்பல் பட்ட தறிகிலர்னவாஞ்சை மிக்கு னடிதொழநினையாரே

உ பசாந்த சித்த குருகுலபவபாண்ட வர்க்கு வரதன்மையுருவோன்ப்ர சித்த நெடியவன்ரிஷிகேசன்

உ லகீன்ற பச்சை யுமையணன்வடவேங்க டத்தி லுறைபவனுயர்சார்ங்க சக்ர கரதலன்மருகோனே

த்ரிபுராந்த கற்கு வரசுதரதிகாந்தன் மைத்து னமுருகதிறல்பூண்ட சுப்ர மணியஷண்முகவேலா

திசைபாய்ந்த பத்ம தடவயலியில்வேந்த முத்தி யருள்தருதிருவாஞ்சி யத்தி லமரர்கள்பெருமாளே.

All songs →