Song 81
புகரப் புங்கப் பகரக் குன்றிற்
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- ரஞ்சனி
- Thalam
- ஆதி - திஸ்ர நடை (12)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனத் தந்தத் தனனத் தந்தத்தனனத் தந்தத்தனதான
Lyrics
புகரப் புங்கப் பகரக் குன்றிற்புயலிற் றங்கிப்பொலிவோனும்
பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்பொருளைப் பண்பிற்புகல்வோனும்
திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்திகிரிச் செங்கைத்திருமாலும்
திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்டெளிதற் கொன்றைத்தரவேணும்
தகரத் தந்தச் சிகரத் தொன்றித்தடநற் கஞ்சத்துறைவோனே
தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்தையளித் தன்புற்றருள்வோனே
பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்படியிற் சிந்தத்தொடும்வேலா
பவளத் துங்கப் புரிசைச் செந்திற்பதியிற் கந்தப்பெருமாளே.
