Song 809
தருவூரிசை யாரமு தார்நிகர்
- Sthalam
- வழுவூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனாதன தானன தானனதனனாதன தானன தானனதனனாதன தானன தானனதனதானா
Lyrics
தருவூரிசை யாரமு தார்நிகர்குயிலார்மொழி தோதக மாதர்கள்தணியாமய லாழியி லாழவுமமிழாதே
தழலேபொழி கோரவி லோசனமெறிபாசம காமுனை சூலமுள்சமனார்முகில் மேனிக டாவினிலணுகாதே
கருவூறிய நாளுமு நூறெழுமலதேகமு மாவலு மாசைகபடமாகிய பாதக தீதறமிடிதீரக்
கனிவீறிய போதமெய் ஞானமுமியலார்சிவ நேசமு மேவரகழல்சேரணி நூபுர தாளிணைநிழல்தாராய்
புருகூதன்மி னாளொரு பாலுறசிலைவேடுவர் மானொரு பாலுறபுதுமாமயில் மீதணை யாவருமழகோனே
புழுகார்பனிர் மூசிய வாசனையுரகாலணி கோலமென் மாலையபுரிநூலுமு லாவுது வாதசபுயவீரா
மருவூர்குளிர் வாவிகள் சோலைகள்செழிசாலிகு லாவிய கார்வயல்மகதாபத சீலமு மேபுனைவள்முதூர்
மகதேவர்பு ராரிச தாசிவர்சுதராகிய தேவசி காமணிவழுவூரில்நி லாவிய வாழ்வருள்பெருமாளே.
