Song 806
காதோடு தோடிகலி யாடவிழி வாள்சுழல
- Sthalam
- திருமாகாளம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானான தானதன தானதன தானதனதானான தானதன தானதன தானதனதானான தானதன தானதன தானதனதனதான
Lyrics
காதோடு தோடிகலி யாடவிழி வாள்சுழலகோலாக லாரமுலை மார்புதைய பூணகலகாரோடு கூடளக பாரமல ரோடலையஅணைமீதே
காலோடு காலிகலி யாடபரி நூபுரமொடேகாச மானவுடை வீசியிடை நூல்துவளகாவீர மானஇத ழூறல்தர நேசமெனமிடறோதை
நாதான கீதகுயில் போலஅல்குல் மால்புரளமார்போடு தோள்கரமொ டாடிமிக நாணழியநானாவி நோதமுற மாதரொடு கூடிமயல்படுவேனை
நானாரு நீயெவனெ னாமலென தாவிகவர்சீர்பாத மேகவலை யாயுமுன வேநிதமுநாதாகு மாரமுரு காஎனவு மோதஅருள்புரிவாயே
பாதாள சேடனுட லாயிரப ணாமகுடமாமேரொ டேழுகட லோதமலை சூரருடல்பாழாக தூளிவிணி லேறபுவி வாழவிடுசுடர்வேலா
பாலாழி மீதரவின் மேல்திருவொ டேயமளிசேர்நீல ரூபன்வலி ராவணகு ழாமிரியபாரேவை யேவியமு ராரியைவர் தோழனரிமருகோனே
மாதாபு ராரிசுக வாரிபரை நாரியுமைஆகாச ரூபியபி ராமிவல மேவுசிவன்மாடேறி யாடுமொரு நாதன்மகிழ் போதமருள்குருநாதா
வானோர்க ளீசன்மயி லோடுகுற மாதுமணவாளாகு காகுமர மாமயிலின் மீதுதிருமாகாள மாநகரில் மாலொடடி யார்பரவுபெருமாளே.
