Song 804
மகரக் குழைக்கு ளுந்து நயனக் கடைக்கி லங்கு
- Sthalam
- திலதைப்பதி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனத் தனத்த தந்த தனனத் தனத்த தந்ததனனத் தனத்த தந்ததனதான
Lyrics
மகரக் குழைக்கு ளுந்து நயனக் கடைக்கி லங்குவசியச் சரத்தி யைந்தகுறியாலே
வடவெற் பதைத்து ரந்து களபக் குடத்தை வென்றுமதர்விற் பணைத்தெ ழுந்தமுலைமீதே
உ கமெய்ப் பதைத்து நெஞ்சும் விரகக் கடற்பொ திந்தவுலைபட் டலர்ச்ச ரங்கள்நலியாமல்
உ லகப் புகழ்ப்பு லம்பு கலியற் றுணர்ச்சி கொண்டுனுரிமைப் புகழ்ப்ப கர்ந்துதிரிவேனோ
புகர்கைக் கரிப்பொ திந்த முளரிக் குளத்தி ழிந்தபொழுதிற் கரத்தொ டர்ந்துபிடிநாளிற்
பொருமித் திகைத்து நின்று வரதற் கடைக்க லங்கள்புகுதக் கணத்து வந்துகையிலாருந்
திகிரிப் படைத்து ரந்த வரதற் குடற்பி றந்தசிவைதற் பரைக்கி சைந்தபுதல்வோனே
சிவபத் தர்முத்த ரும்பர் தவசித் தர்சித்த மொன்றுதிலதைப் பதிக்கு கந்தபெருமாளே.
