Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 8

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை

Thalam
ஆதி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனதான

Lyrics

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினைஉரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணைஉறைப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுனதருள்மாறா

உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன்மலைபோலே

கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவருகறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடுபொருபோதே

கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறுகருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்கணத்தில் என்பய மறமயில் முதுகினில்வருவாயே

வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொளவிழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுணவிரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர்புரிவேலா

மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகியகொடிச்சி குங்கும முலைமுக டுழுநறைவிரைத்த சந்தன ம்ருகமத புயவரைஉடையோனே

தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடுபுனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடுசினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழமகிழ்வோனே

தெனத்தெ னந்தன எனவரி யளிநறைதெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்திருப் பரங்கிரி தனிலுறை சரவணபெருமாளே.

All songs →