Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 793

இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத்தனத்தனதத் தனத்தனதத்தனதான

Lyrics

இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற்றெனக்கியலுக் கிசைக்கெதிரெப்புலவோரென்

றெடுத்துமுடித் தடக்கைமுடித் திரட்டையுடுத் திலச்சினையிட்டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற்றியல்மாதர்

குரக்குமுகத் தினைக்குழலைப் பனிப்பிறையொப் பெனப்புயலொப்பெனக்குறுகிக் கலைக்குள்மறைத்திடுமானின்

குளப்படியிற் சளப்படுமிப் பவக்கடலைக் கடக்கஇனிக்குறித்திருபொற் கழற்புணையைத்தருவாயே

அரக்கரடற் கடக்கஅமர்க் களத்தடையப் புடைத்துலகுக்கலக்கணறக் குலக்கிரிபொட்டெழவாரி

அனைத்தும்வறப் புறச்சுரர்கற் பகப்புரியிற் புகக்கமலத்தனைச்சிறையிட் டிடைக்கழியிற்பயில்வோனே

கரக்கரடக் களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்தமணிக்கழைத்தரளத் தினைத்தினையிற்குறுவாளைக்

கணிக்குறவக் குறிச்சியினிற் சிலைக்குறவர்க் கிலச்சைவரக்கயத்தொடுகைப் பிடித்தமணப்பெருமாளே.

All songs →