Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 788

அமுதினை மெத்தச் சொரிந்து மாவின

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தத்தத் தனந்த தானனதனதன தத்தத் தனந்த தானனதனதன தத்தத் தனந்த தானனதனதான

Lyrics

அமுதினை மெத்தச் சொரிந்து மாவினதினியப ழத்தைப் பிழிந்து பானறவதனொடு தித்தித் தகண்ட ளாவியவிதழாராய்

அழகிய பொற்றட்டி னொண்டு வேடையின்வருபசி யர்க்குற் றவன்பி னாலுணவருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர்மயல்தீரக்

குமுதம் விளர்க்கத் தடங்கு லாவியநிலவெழு முத்தைப் புனைந்த பாரியகுலவிய சித்ரப் ப்ரசண்ட பூரணதனபாரக்

குவடிள கக்கட் டியுந்தி மேல்விழுமவர்மய லிற்புக் கழிந்த பாவியைகுரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுறஅருள்வாயே

வமிசமி குத்துப் ப்ரபஞ்சம் யாவையுமறுகிட வுக்ரக் கொடும்பை யானபுன்மதிகொ டழித்திட் டிடும்பை ராவணன்மதியாமே

மறுவறு கற்பிற் சிறந்த சீதையைவிதனம் விளைக்கக் குரங்கி னாலவன்வமிச மறுத்திட் டிலங்கு மாயவன்மருகோனே

எமதும லத்தைக் களைந்து பாடெனஅருள அதற்குப் புகழ்ந்து பாடியஇயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள்முருகோனே

எழில்வளை மிக்கத் தவழ்ந்து லாவியபொனிநதி தெற்கிற் றிகழ்ந்து மேவியஇணையிலி ரத்னச் சிகண்டி யூருறைபெருமாளே.

All songs →