Song 786
சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி
- Sthalam
- திருக்கடவூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தான தத்த தானதன தான தத்ததானதன தான தத்ததனதான
Lyrics
சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கிதூயவொளி காண முத்திவிதமாகச்
சூழுமிருள் பாவ கத்தை வீழ அழ லு¡டெ ரித்துசோதிமணி பீட மிட்டமடமேவி
மேலைவெளி யாயி ரத்து நாலிருப ராப ரத்தின்மேவியரு ணாச லத்தினுடன்மூழ்கி
வேலுமயில் வாக னப்ர காசமதி லேத ரித்துவீடுமது வேசி றக்கஅருள்தாராய்
ஓலசுர ராழி யெட்டு வாளகிரி மாய வெற்புமூடுருவ வேல்தொ டுத்தமயில்வீரா
ஓதுகுற மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்துளோமெனுப தேச வித்தொடணைவோனே
காலனொடு மேதி மட்க வூழிபுவி மேல்கி டத்துகாலனிட மேவு சத்தியருள்பாலா
காலமுதல் வாழ்பு விக்க தாரநகர் கோபு ரத்துள்கானமயில் மேல்த ரித்தபெருமாளே.
