Song 784
மேக வார்குழல தாடதன பாரமிசை
- Sthalam
- வைத்தீசுரன் கோயில்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தானதன தானதன தானதனதான தானதன தானதன தானதனதான தானதன தானதன தானதனதனதான
Lyrics
மேக வார்குழல தாடதன பாரமிசையார மாடகுழை யாடவிழி யாடபொறிமேனி வாசனைகள் வீச அல்குல் மோதிபரிமளமேற
மீனு லாடையிடை யாடமயில் போலநடையோல மோலமென பாதமணி நூபுரமுமேல்வில் வீசபணி கீரகுயில் போலகுரல்முழவோசை
ஆக வேயவைகள் கூடிடுவர் வீதிவருவோரை வாருமென வேசரச மோடுருகிஆசை போலமனை யேகொடணை வார்கள்குவடதிபார
ஆணி மாமுலையின் மூழ்கிசுக வாரிகொடுவேர்வை பாயஅணை யூடமளி யாடியிடரான சூலைபல நோய்கள்கட லாடியுடலுழல்வேனோ
நாக லோகர்மதி லோகர்பக லோகர்விதிநாடு ளோர்களம ரோர்கள்கண நாதர்விடைநாதர் வேதியர்கள் ஆதிசர சோதிதிகழ்முநிவோர்கள்
நாத ரேநரர்ம னாரணர்பு ராணவகைவேத கீதவொலி பூரையிது பூரையெனநாச மாயசுரர் மேவுகிரி தூளிபடவிடும்வேலா
தோகை மாதுகுற மாதமுத மாதுவினல்தோழி மாதுவளி நாயகிமி னாளைசுகசோக மோடிறுகி மார்முலைவி டாமலணைபுணர்வோனே
தோளி ராறுமுக மாறுமயில் வேலழகுமீதெய் வானவடி வாதொழுதெ ணாவயனர்சூழு காவிரியும் §வ்ளுர்முரு காவமரர்பெருமாளே.
