Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 776

மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சீறிகள்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானனதனனத்தத் தானத் தானனதனதான

Lyrics

மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சீறிகள்மருளப்பட் டாடைக் காரிகளழகாக

மவுனச்சுட் டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக் காரிகள்வகைமுத்துச் சாரச் சூடிகள்விலைமாதர்

குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள்குசலைக்கொட் சூலைக் காலிகள்மயல்மேலாய்க்

கொளுவிக்கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனைகுமுதப்பொற் பாதச் சேவையிலருள்வாயே

கதறக்கற் சூரைக் கார்கட லெரியத்திக் கூறிற் பாழ்படககனக்கட் டாரிக் காயிரையிடும்வேலா

கதிர்சுற்றிட் டாசைப் பால்கிரி யுறைபச்சைப் பாசக் கோகிலகவுரிப்பொற் சேர்வைச் சேகரமுருகோனே

திதலைப்பொற் பாணிக் கார்குயி லழகிற்பொற் றோகைப் பாவையைதினமுற்றுச் சாரத் தோள்மிசையணைவோனே

திலதப்பொட் டாசைச் சேர்முக மயிலுற்றிட் டேறிக் காழியில்சிவன்மெச்சக் காதுக் கோதியபெருமாளே.

All songs →