Song 763
வண்டணி யுங்கமழ் கூந்த லார்விழி
- Sthalam
- திருமயேந்திரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தன தந்தன தாந்த தானனதந்தன தந்தன தாந்த தானனதந்தன தந்தன தாந்த தானனதனதான
Lyrics
வண்டணி யுங்கமழ் கூந்த லார்விழிஅம்பிய லுஞ்சிலை போந்த வாணுதல்வண்டர ளந்திக ழாய்ந்த வார்நகைகுயில்போல
வண்பயி லுங்குவ டாண்ட மார்முலையின்பொறி யங்குமி ழாம்பல் தோள்கரவஞ்சியெ னுங்கொடி சேர்ந்த நூலிடைமடவார்பொன்
கண்டவு டன்களி கூர்ந்து பேசிகள்குண்டுணி யுங்குரல் சாங்க மோதிகள்கண்சுழ லும்படி தாண்டி யாடிகள்சதிகாரர்
கஞ்சுளி யுந்தடி யீந்து போவெனநஞ்சையி டுங்கவ டார்ந்த பாவிகள்கம்பையி லுஞ்சட மாய்ந்து நாயனுமுழல்வேனோ
அண்டரு டன்தவ சேந்து மாதவர்புண்டரி கன்திரு பாங்கர் கோவெனஅஞ்சலெ னும்படி போந்து வீரமொடசுராரை
அங்கமொ டுங்கிட மாண்டொ டாழிகளென்கிரி யும்பொடி சாம்பர் நூறிடஅந்தக னுங்கயி றாங்கை வீசிடவிடும்வேலா
செண்டணி யுஞ்சடை பாந்தள் நீர்மதியென்பணி யன்கன சாம்பல் பூசியசெஞ்சட லன்சுத சேந்த வேலவமுருகொனே
திங்கள்மு கந்தன சாந்து மார்பினளென்றனு ளம்புகு பாங்கி மானொடுசிந்தைம கிழ்ந்தும யேந்த்ர மேவியபெருமாளே.
