Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 760

கழைமுத்து மாலை புயல்முத்து மாலை

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - ஆதிதனனத்த தான தனனத்த தானதனனத்த தானதனதான

Lyrics

கழைமுத்து மாலை புயல்முத்து மாலைகரிமுத்து மாலைமலைமேவுங்

கடிமுத்து மாலை வளைமுத்து மாலைகடல்முத்து மாலையரவீனும்

அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பினடைவொத்து லாவஅடியேன்முன்

அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடுமடிமைக்கு ழாமொடருள்வாயே

மழையொத்த சோதி குயில்தத்தை போலுமழலைச்சொ லாயியெமையீனு

மதமத்த நீல களநித்த நாதர்மகிழ்சத்தி யீனுமுருகோனே

செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானைதிருமுத்தி மாதின்மணவாளா

சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞானதிருமுட்ட மேவுபெருமாளே.

All songs →