Song 752
பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி
- Sthalam
- விருத்தாசலம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதத்த தனதத்த தனதத்த தனதத்ததனதத்த தனதத்ததனதான
Lyrics
பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டிபறியக்கை சொறியப்பல்வெளியாகிப்
படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்கபழமுற்று நரைகொக்கினிறமாகி
விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டுமெலிவுற்று விரல்பற்றுதடியோடே
வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தைவிடுவித்து னருள்வைப்பதொருநாளே
அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தினடல்வஜ்ர கரன்மற்றுமுளவானோர்
அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்அதுலச்ச மரவெற்றியுடையோனே
வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்றவடிவுற்ற முகில்கிட்ணன்மருகோனே
மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர்வளர் விர்த்த கிரியுற்றபெருமாளே.
