Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 749

அறிவி லாதவ ¡£னர்பேச் சிரண்டு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - அங்கதாளம் (8)தகிட-1 1/2, தக-1, திமி-1தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தனன தானன தானனாத் தனந்ததனன தானன தானனாத் தனந்ததனன தானன தானனாத் தனந்ததனதான

Lyrics

அறிவி லாதவ ¡£னர்பேச் சிரண்டுபகரு நாவினர் லோபர்தீக் குணங்களதிக பாதகர் மாதர்மேற் கலன்கள்புனையாதர்

அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்துதிரியு மானுடர் பேதைமார்க் கிரங்கியழியு மாலினர் நீதிநூற் பயன்கள்தெரியாத

நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்துபொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்சநிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்ததமிழ்கூறி

நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்துவறுமை யாகிய தீயின்மேற் கிடந்துநெளியு நீள்புழு வாயினேற் கிரங்கியருள்வாயே

நறிய வார்குழல் வானநாட் டரம்பைமகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கிநகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்துகளிகூர

நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்ததகுவர் மாதர்ம ணாளர்தோட் பிரிந்துநசைபொ றாதழு தாகமாய்த் தழுங்கியிடர்கூர

மறியு மாழ்கட லு¡டுபோய்க் கரந்துகவடு கோடியின் மேலுமாய்ப் பரந்துவளரு மாவிரு கூறதாய்த் தடிந்தவடிவேலா

மரவு காளமு கீல்கள்கூட் டெழுந்துமதியு லாவிய மாடமேற் படிந்தவயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்தபெருமாளே.

All songs →